எங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மொக்குத்தனமாக சிலர் அனுர குமாரவுக்கு ஆதரவு வெளியிடுகின்றனர்.
எங்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மொக்குத்தனமாக சிலர் அனுர குமாரவுக்கு ஆதரவு வெளியிடுவதாக கூறிக்கொள்வதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.
குறித்த வேட்பாளர் தொடர்பில் அறிந்து வைத்துக்கொணடு அந்த வேட்பாளரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது உங்கள் தனிப்பட்ட அரசியல் குரோதங்களை கோவங்களை வைத்து தீர்மானிக்கின்றீர்களா என்பதை யோசிக்க வேண்டும்.
சுமந்திரன் , சாணக்கியன் , ஹிஸ்புல்லாஹ் மற்றும் மு கா தலைவர் ஹக்கீம் ஆகியோருடன் உள்ள தனிப்பட்ட அரசியல் குரோதங்களை வைத்துக்கொண்டு இந்த ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்குகளை பயன்படுத்துவது மடத்தனம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
ஜே வி பி யின் கூட்டத்தை கண்டு மயங்கிவிடாதீர்கள் 3 அரை லட்சம் வாக்குகளை பெற்றபோது கூட அவர்கள் கோல் பேஸை நிரப்பியவர்கள்.மக்களை கூட்டங்களுக்கு கொண்டு வருவது, கோல் பேஸை நிரப்புவது,பேஸ் புக்கில் கலர்ஸ் காட்டுவது ஜே வி பிக்கு கை வந்த கலை என அவர் குறிப்பிட்டார்.