News
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட இரயில்வே குறுக்குவழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


