News

நாடு முழுவதிலும் விசேட பாதுகாப்பு – 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில்!

தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Back to top button