News

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

புதிய ஜனாதிபதி அநுர குமார, பிரதமர் ஹரிணியை சந்திக்க ஏற்பாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இலங்கைக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருடன் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் மேலும் 8 உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

இன்று (04) காலை 10.15 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-34 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

கலாநிதி எஸ். ஜெய்சங்கர் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இந்தக் குழுவை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இந்த நிகழ்வை செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-8050455532790881&output=html&h=358&adk=1029460199&adf=861912785&pi=t.aa~a.125513315~i.13~rp.4&w=430&abgtt=6&lmt=1728019326&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8145939342&ad_type=text_image&format=430×358&url=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F2024%2F10%2F04%2Fbreaking-news%2F88572%2F%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%2F&fwr=1&pra=3&rh=325&rw=390&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1728019326063&bpp=1&bdt=625&idt=1&shv=r20241001&mjsv=m202409250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D8166f59c2de8d1b9%3AT%3D1728019309%3ART%3D1728019309%3AS%3DALNI_MZkJ4rG0bVfXvKBb0o_P50lWH8dtw&gpic=UID%3D00000f342d5b141d%3AT%3D1728019309%3ART%3D1728019309%3AS%3DALNI_MZ7pnWI0SGj9Zfj50BH13DlHO6IAw&eo_id_str=ID%3D5f1717dec3371fec%3AT%3D1728019309%3ART%3D1728019309%3AS%3DAA-AfjZDbcRSvs728YxBqrusBMdJ&prev_fmts=0x0%2C430x358%2C430x358&nras=4&correlator=6056229255759&frm=20&pv=1&u_tz=330&u_his=51&u_h=896&u_w=414&u_ah=896&u_aw=414&u_cd=24&u_sd=3&adx=0&ady=1960&biw=430&bih=739&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C44798934%2C95338243%2C95341936%2C95342015%2C95343455%2C95339679&oid=2&pvsid=3565574789702067&tmod=1929188803&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.thinakaran.lk%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C414%2C0%2C430%2C739%2C430%2C739&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&ifi=14&uci=a!e&btvi=3&fsb=1&dtd=121

இன்று (04) இலங்கைக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பிற்பகல் 6.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அதே விமானத்தில் இந்தியாவின் புதுடில்லிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Recent Articles

Back to top button