விலையை குறைக்கும் வரை மாட்டிறைச்சியை புறக்கணிக்குமாறு கோரிக்கை !

அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, கோவிட் வைரஸ் போன்ற காலங்களில் ஏற்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகள், எரிபொருள் தட்டுப்பாடு இது போன்ற பல காரணங்களை வைத்து அன்று பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வேகமாக உயர்வடைந்ததை நாம் அனைவரும் அறிவோம்; அந்த வகையில் மாட்டிறைக்கி இந்த பிரச்சனைகளுக்கு முன்பு கொழும்பு மாவட்டத்தில் 1Kg மாட்டிறைச்சி 1200/= , 1300/= ஆகிய விலைகளுக்கு விற்கப்பட்டு கொண்டிருந்தது.
மேலும் மேற்கு கூறப்பட்ட நெருக்கடியான நிலைமைகளுக்கு பிற்பாடு இறைச்சியின் விலை பல மடங்காக அதிகரித்தது; அந்த வகையில் 1Kg மாட்டிறைச்சி 2500/= ரூபா விற்கு விக்கப்பட்டது, விற்கப்பட்டு கொண்டிருக்கிறது.மேற்கு புறப்பட்ட அனைத்து இக்கட்டான நிலைமைகளும் சீராகிய பின்னரும், ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் மாற்றமடைந்து, குறைவடைந்த பின்னரும் இன்று வரை மாட்டு இறைச்சியின் விலை மாற்றமடையாமல், குறைவடையாமல் அதே விலைக்கு கொழும்பு மாட்டிறைச்சி மாபியாக்களால் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இதே நிலைமைதான் நம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்.
அன்பார்ந்த சகோதரர்களே!
கடந்த 20 மாதங்களாக நாட்டின் நிலைமைகள் ஓரளவிற்கு சீரான நிலைமைக்கு வந்து , எந்தக் கட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகமும் நடந்து, ஒவ்வொரு மாதமும் அதில் விலை குறைப்பு ஏற்பட்டு கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மாடுகளே ஒரு ஊரிலிருந்து இன்னும் ஒரு ஊருக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத இந்த சூழ்நிலையில்; 1kg இறைச்சியின் விலை 2000/= ரூபாவிற்கு கீழ் விற்பனை செய்யக்கூடிய நிலைமை இருந்தும் முஸ்லிம் மாட்டிறைச்சி மாபியாக்கள் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதனுடைய விலையை குறைக்காமல் பொருளாதார கஷ்டத்தில் வாழும் ஏழை மக்களுக்கு அநியாயம் செய்து வருவதை காண்கின்றோம்.
இதற்கு அரசாங்கமோ, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் நகர சபைகளோ, பிரதேச சபைகளோ இதுவரைக்கும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே எமது அன்பார்ந்த வேண்டுகோள்
இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களில் 1800/=, 2000/= போன்ற விலைகளுக்கு விற்கப்படும் இந்த மாட்டிறைச்சி நிச்சயமாக அதிக லாபத்துடன் கொழும்பில் விற்றால் கூட ஆகக்கூடிய விலையாக இவர்களுக்கு 2000/= ரூபாவிற்கு இதனை கொடுக்க முடியும்.எதுவரை எமக்கு அந்தத் தேவை ஏற்படாதோ,எதுவரை நாம் அவர்களுக்கு அந்த அழுத்தத்தை கொடுக்காமல் இருக்கின்றோமோ அதுவரை விலை குறைப்பு என்ற விடயம் நடைபெறாது.
எமக்கு ஒவ்வொரு நாளும் மாட்டிறைக்கி சாப்பிட வேண்டும் என்ற தேவை கிடையாது.நாம் குறைந்தது 10 நாட்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்பதால் மரணிக்கப் போவதில்லை, எனக்கு எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை; என்றாலும் நாங்கள் செய்யப் போகும் இந்த போராட்டம் ஏனைய வியாபாரிகளுக்கும் ஒரு பாடமாக அமையும்.
அன்பார்ந்த கொழும்பு மாவட்ட முஸ்லிம்களே!
தயவுசெய்து எதிர்வரும் Oct 10ஆம் திகதி முதல் 20ஆம் திகைதி வரை தொடர்ந்து மாட்டிறைச்சி வாங்குவதையும், சாப்பிடுவதையும் தவிர்த்துக் கொள்வோம்; நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் Oct 21 ஆம் திகதி மாட்டிறைச்சியை முழு கொழும்பிலும் 2000/= ரூபாவிற்கு வாங்கக் கூடியதாக இருக்கும்.
இதனால் ஏழைகளும், ஏழைக் குழந்தைகளும் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.அவர்களுடைய நன்மைகளும், பிரார்த்தனைகளும் எம்மை வந்து சேரும். ஒன்றுபடுவோம் மாட்டிறைச்சியை 2000/= ரூபாவிற்கு விக்க வைப்போம்.
Muslim progressive power (MPP)

