Site icon Madawala News

மீண்டும் ஆரம்பமானது சட்டவிரோத சொத்து தொடர்பில் தீவிர விசாரணை.. (காலை 9 மணிக்கு உள்ளே சென்ற பியூமி ஹன்சமாலி, மாலை 6 மணிக்கு வெளியேறினார்)

பிரபல மாடல் நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது..

அவருக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (04) சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 5ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் BMW ரக கார் பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இருந்து வாங்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி, BMW கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் என்பது குறித்தும், அவர் விற்பனை செய்யும் அழகுசாதன பொருட்கள் ஊடாக அதிக அளவு பணம் பெற்றது குறித்தும் சட்டவிரோத சொத்துகள் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.

அந்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.

சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Exit mobile version