நாட்டுக்கும், சமூகத்திற்கும் சேவையாற்ற,
கண்டி மாவட்டத்தில் இருந்து என்னையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது; தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியாஸ் பாரூக்
தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட 11ம் இலக்க வேட்பாளர் சகோதரர் ரியாஸ் பாரூக் அவர்கள் கலகெதர மக்கள் சந்திப்பின் போது ….
நாட்டை கட்டி எழுப்பும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி ஒரு பலம் பொருந்திய கட்சியாக மாறி இருக்கும் இத்தருணத்தில் பாராளுமன்றத் தேர்தலில் இம்முறையும் அங்கத்தவர்கள் விருப்பு வாக்குகளின் மூலமே தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
சென்ற காலங்களில் எமது கட்சிக்கு குறைந்த அளவிலான வாக்குகளே கிடைத்து வந்தன. அக்காலப் பகுதியில் அங்கத்தவர்களை கட்சியே தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி வைத்தது.
ஆனால் தற்பொழுது நிலைமை அவ்வாரல்ல !
தேசிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்றால், கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளோடு எந்தெந்த வேட்பாளர்களுக்கு அதிகப்படியான விருப்பு வாக்குகள் கிடைக்கப் பெறுகின்றதோ அந்த வேட்பாளர்கள் மாத்திரமே இம்முறை தேசிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்றம் செல்ல முடியும்.
எனவே நாட்டுக்கும், சமூகத்திற்கும் சேவையாற்ற,
கண்டி மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளால் திசைகாட்டி சின்னத்தில் 11ம் இலக்கத்திற்கு வாக்களித்து, என்னையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என கலகெதர மக்கள் சந்திப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட 11ம் இலக்க வேட்பாளர் சகோதரர் ரியாஸ் பாரூக் தெரிவித்தார்.