கம்பஹா கஹட்டோவிட்ட கிராமத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக M.R.F ரிபா, உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்த எம்.ஆர்.எப்.ரிபா LLB (Hons), Attorney at Law கடந்த 22 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
M.H.M.ரிபாய் மற்றும் பௌஸுல் கரீமா ஆகியோரின் புதல்வியான இவர், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியாவார்.
உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்திற்கு தெரிவான இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டார்.
2024 ஆண்டின் நடுப்பகுதியில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் அவருக்கு ஆணைக்குழுவின் காதிப்பிரிவில் நியமனம் வழங்கப்பட்டதனை தொடர்ந்து அவர் அங்கு கடமைகளைப் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றமை விஷேட அம்சமாகும்.
எம்.ஆர்.எப்.ரிபா கஹட்டோவிட்ட கிராமத்தின் முதலாவது பெண் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.