எனக்கும் அனுரவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ; ரனில்

தனக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் பெரும்பான்மை பலம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) நீர்கொழும்பில் தெரிவித்தார்.
தோற்றால் வீட்டிலேயே இருக்குமாறு ஜனாதிபதி அனுர கூறியதாக தெரிவித்த திரு.ரணில் விக்கிரமசிங்க, பெரும்பான்மையான மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவருக்கும் பெரும்பான்மை வழங்கப்படவில்லை என்றால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி நான். பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி அவர்.
புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு காங்கிரஸில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உங்களைப் போன்று எனக்கு பெரும்பான்மை பலம் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

