News

சந்தையில் லாஃப்ஸ் கேஸ் தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்

சந்தையில் லாஃப்ஸ் கேஸ் தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.டபிள்யூ.கே.எச்.வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள இராணுவ நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு சரக்குகள் தீவுக்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் திரு.டபிள்யூ.கே.எச்.வாகபிட்டிய தெரிவித்தார்.

Recent Articles

Back to top button