News
புகையிரத பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் T-56 தோட்டாக்கள் மீட்பு !

இன்று (29) காலை மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் 57 T-56 தோட்டாக்களை புகையிரத பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
பெலியத்த புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வண்டிகளை சோதனையிட்ட போது, இருவர் வண்டியை விட்டு வெளியேறியதாகவும்,பின்னர் இருவரும் அமர்ந்திருந்த ஆசனங்களுக்கு அடியில் தோட்டாக்கள் அடங்கிய பையை கண்டெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

