கம்பளை சாஹிரா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெற உள்ள இலங்கை வானொலி கந்துரட்ட (கண்டி) முஸ்லிம் ஒலிபரப்பு சேவையின் பரிசளிப்பு நிகழ்வு
இலங்கை வானொலி கந்துரட்ட(கண்டி) முஸ்லிம் ஒலிபரப்பு சேவையில் நடாத்தப்பட்ட மீலாத் தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் கந்து ரட்ட முஸ்லிம் சேவையின் அறிப்பாளரும் எழுத்தாளருமான சிமாரா அலி
தொகுத்து வழம்க்கும் மின்னும் மின்பரிசில்கள் சிறுவர் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவும் சிறுவர்களுக்கான் சான்றிதழ் பரிசளிபு வழங்கும் நிழ்வும் நவம்பர் 03 ந்திகதியன்று கம்பளை சாஹிரா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் காலை 10.00 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது
கம்பளை சாஹிரா கல்லூரியின்அதிபர் ஏ.எம்.அப்ஸான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிதம அதிதியாக கந்துரட்ட வானொலி நிலைய உதவி பணிப்பாளர் கே.பி .ஜயசூரிய கெளரவ அதிதியாக பணிப்பாளர் நிறுவனர் எக்லாட் யுனைட் /கண்டி- மாத்தளை வை.எம்.எம்.ஏ. சம்மேளன பணிப்பாளர் இஹ்திஷாம் எம்.ஹுசைன்தீன் சிறப்பு அதிதியாக கொழும்பு வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஏ.எம். ரலீம் மற்றும் கந்துரட்ட முஸ்லிம்சேவை “மின்னும் மின்மினிகள்” சிறுவர் நிகழ்ச்சித் கவிதைச் சாரல் தொகுப்பாளர் எழுத்தாளர் திருமதி சிமாரா அலி ஆகியோருடன் அறிவிப்பாளர் திருமதி சாஹிரா சர்ஜுடீன் முனாஸ் ஆகியோருடன் மற்றும் வானொலி அபிமானிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.