“PTA – பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான NPPயின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.”

இன்றைய பத்திரிகை செய்தியை அவதானித்த போது அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் அவர்களின் PTA தொடர்பான கருத்தானது அவர்கள் தேர்தலுக்கு முன்பிருந்த “இச்சட்டம் நீக்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டையோ அல்லது NPP தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றோ அமைந்திருக்கவில்லை.
அனைவருக்கும் தெரியும் அவர்கள் எதிர் கட்சியில் இருந்தபோது PTAயிற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பினர். இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மற்றும் ஊடகங்களிலும் கோஷமிட்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
ஒரே விடயத்தில் இரண்டு நிலைப்பாடுகளை தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் என்று வெவ்வேறு நிலைகளில் எடுத்திருப்பது NPP யின் உண்மைத் தன்மையை கேள்விக்குறியாக்குகிறது
எதிர் கட்சியில் இருக்கும் போது தமது கட்சி நலனை அல்லது தேர்தல் இலக்குகளை கருதி ஒரு விடயத்தை எதிர்த்து மக்களை வழி நடத்துவதும் பின் ஆட்சிக்கு வந்தபின் அதே விடயத்தை நாட்டு நலன் எனக் கூறி கடந்த கால அரசாங்கங்களைப் போன்று ஆதரிப்பதும் பலமான எதிர்கட்சியின் தேவையை உணர்த்துகிறது.
NPPயின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் 231 ம் பக்கத்தில் பயங்கரவாத சட்டங்களை இல்லாதொழித்தல் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தும் தற்போது நீக்குவதா? இல்லையா? என்று பரிசீலிப்பதும் இவர்களின் நிலைப்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
MLM.சுஹைல்

