News
சிறிய பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வயது குறைந்த பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் மேலும் 4500 ரூபாய் தண்டப் பணமும், இழப்பீடாக பாதிக்கப்பட்டவருக்கு 100,000 வை குற்றவாளி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

