Site icon Madawala News

ஊழல் அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்திற்காக எந்த இரக்கமற்ற குற்றத்திலும் ஈடுபடலாம் என்பதால் அனுர திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்கு பெரமுனவின் அழைப்பாளர் வாகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.



ஊழல் அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்திற்காக எந்த இரக்கமற்ற குற்றத்திலும் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.



தேசிய மக்கள் சக்தியினால் கண்டியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதித்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அனுர திஸாநாயக்க பாதுகாக்கப்பட வேண்டும். டொனால்ட் ட்ரம்பை சுட்ட சம்பவத்தின் பின்னர்,இப்போது அனுர திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பல பிக்குகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர் பொதுவெளியில் தோன்றாமல் உரைகளை ஆற்றவேண்டும். இந்த ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக எந்த இரக்கமற்ற குற்றத்தையும் செய்ய முடியும் என்பதால் அவர் பாதுகாக்கப்பட வேண்டும்.’ என்றார்.

Exit mobile version