News
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவத்துடன் 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் கைது
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த முப்பத்தெட்டு வயதுடையவர்
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்