Site icon Madawala News

நவம்பர் மாதத்திற்கான டோக்கன் நிறைவு ! அவசர தேவைகளுக்காக மாத்திரம் கடவுச்சீட்டு பெற வரவும் ..

வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய தணிக்கை நடத்தப்படும்.அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நவம்பர் மாதத்திற்கான டோக்கன் முடிந்துவிட்டதாக கூறிய அவர் , இம்மாதத்தில் அவசர தேவைகளுக்கு தவிர வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வருவதை தவிர்க்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version