பாடசாலை பரீட்சை வினாத்தாளில் NPP மற்றும் JVP யுடன் தொடர்பான வினாக்கள் திட்டமிட்டு வினவப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம்..
அரச நிறுவனங்களில் பிழையான அரசியல் கலாசாரத்திற்கு system Change க்கூடாக முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.”
களுத்துறை மாவட்ட பாடசாலை ஒன்றில் நடாத்தப்பட்ட பரீட்சையொன்றின் முதல் ஐந்து வினாக்களில் “தேசிய மக்கள் சக்தியுடனும், JVP யுடனும் தொடர்பான வினாக்கள் திட்டமிட்டு வினவப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனம் எழுந்துள்ளது.
மக்கள்
விடுதலை முன்னனி களுத்துறை மாவட்ட தலைவர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கல்வி கற்ற CWW கன்னங்கர கல்லூரியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்வாறான அரசியல் திணிப்பு பாடசாலை நிருவாகத்தில் மாத்திரமல்ல ஏனைய எல்லா அரச நிறுவனங்களிலும் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதே எமது சுட்டிக்காட்டலுமாகும். ஏனென்றால் இதுவும் system change க்குள் அடங்குகின்ற ஒன்றே. ஆகவே அனைத்து அரச நிறுவனங்களும் அரசியல் பக்கச்சார்பானதாக இருக்கவும் கூடாது.
இதன் போது சிலர் இவ்விடயத்தில் எம்மை நோக்கி இவ்வாறான வினா ஒன்றையும் தொடுக்கலாம்,
அநுர கூறியா? NPP அரசாங்கம் கூறியா? இந்த வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டது இல்லைதானே. பாடசாலை நிருவாகம்தான் இதற்குக் காரணம். என்ற அடிப்படையில்,
இதற்கமைவாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தற்போது நடைமுறையிலிருக்கின்ற இவ்வேளையில் குறித்த பாடசாலை நிருவாகத்தினர் JVP சார்பானவர்களாகவும் இருக்கலாம் என்றாலும் இத்தகைய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து system change ஐ மையப்படுத்திய நிருவாகங்களையுடைய அரச நிறுவனங்களை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்புமாகும்.
அதேபோன்று ஏனையவர்களின் சொத்துக்களை அசிங்கமாக்குகின்ற, சேதப்படுத்துகின்ற வீண்விரயமான poster ஒட்டும் கலாசாரம் கூட system change க்கூடாக இல்லாமலாக்கப்படவும் வேண்டும். அதிலும் தேர்தல் சட்டங்களை மீறி சில இடங்களில் JVP கொள்கையுடையவர்களால் ஒட்டப்படும் poster களை பார்க்கும் போது சட்டத்தை மதிக்கின்ற JVP யும் இதற்கு விதுவிலக்கானவர்கள் அல்ல என்பதனையும் காட்டுகின்றது.
MLM.சுஹைல்