News

போராடி வென்ற ஹக்கீம் ! 5ம் இடத்தில் ஹலீம் !!

இம்முறை கண்டி மாவட்ட SJB வாக்கு வங்கி கடும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கண்டி மாவட்ட விருப்பு வாக்குகளில் ரவுப் ஹக்கீம் கடுமையான போராட்டத்தின் பின்னர் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

ரவுப் ஹக்கீமுக்கு 30883 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள சமிந்திரானி கிரியல்ல 30780 விருப்பு வாக்குகள் பெற்றுள்ளார்.

முன்றாம் இடத்தை பிடித்த திஸ்ஸ அத்தநாயக 29600 விருப்பு வாக்குகளையும், ஏர்ள் குனசேகர 29570 வாக்குகளையும், ஹலீம் 24126 வாக்குகளை பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

2015ம் ஆண்டியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற ஹக்கீம் கடந்த 2020 தேர்தலில் 83 ஆயிரம் வாக்குகள பெற்றிருந்த நிலையில் அவரது வாக்கு வங்கி கடும் சரிவை சந்தித்துள்ளது.

Recent Articles

Back to top button