News

அதிரடி சிரமதானத்தின் எதிரொலி… வரலாற்றில் முதல் தடவையாக 146 க்கு மேற்பட்ட புதிய முகங்களுடன் இலங்கை பாராளுமன்றம்.

2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களில் 146 பேர் முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.



நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியது.



தேசிய மக்கள் சக்தியில் வெற்றிபெற்ற 141 பேரில் 130 எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பெற்றுக்கொண்ட 35 நாடாளுமன்ற இடங்களில் எட்டு புதிய எம்.பி.க்கள் தெரிவாகியுள்ளனர். 27 பேர் இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள்.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சார்பாக ஒரே ஒரு புதிய எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல, இலங்கைத் தமிழரசு கட்சி ஆறு இடங்களைப் பெற்றது, அதில் மூன்று புதிய எம்பிக்கள் வெற்றி பெற்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் (SLMC) புதிய உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 



இதற்கிடையில், புதிய ஜனநாயக முன்னணி (NDF) இந்த ஆண்டு தேர்தலில் மூன்று எம்பி ஆசனங்களைப் பெற்றது, அவர்கள் அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். 



தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, 29 தேசிய பட்டியல் ஆசனங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதுடன், 150 க்கும் மேற்பட்ட முதல் முறை எம்.பி.க்களை வரவேற்க பாராளுமன்றம் தயாராகி வரும் நிலையில், தேசிய பட்டியல் உறுப்பினர்களிலும் புதியவர்கள் இருக்கலமென எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button