News

சிலிண்டர் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு ரவி , தினேஷின் பெயர்கள் முன்மொழிவு !

பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகிய இருவரையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் அதற்கு கூட்டணிக்குள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் வழங்க இணக்கம் காணப்பட்டதன் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ரனிலோடு இணைந்த குழுவில் உள்ள இரண்டு இளம் உறுப்பினர்களுக்கு இந்த தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் காலத்தில் திரு.ரணில் விக்கிரமசிங்கவிடம் வந்த தலதா அத்துகோரளவும் இந்த தேசியப் பட்டியல் ஆசனத்திற்குள் பதுங்கிக் கொள்ள முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

Recent Articles

Back to top button