News
8.3 மில்லியன் பெறுமதியான வேன் ஒன்றை திருடிச் சென்ற இளைஞன் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 8.3 மில்லியன் பெறுமதியான வேன் ஒன்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 09ஆம் திகதி திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓப்பாவத்தை பிரதேசத்தில் வைத்து 28 வயதுடைய இளைஞரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்