News
யாருக்கு தேசியப் பட்டியல் கொடுப்பது? யாருக்கு கொடுக்காமல் இருப்பது என்ற கடும் நெருக்கடியில் ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஆசனங்களுக்கு ஏரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் உள்ளிட்ட பலர் சேர்க்கப்பட வேண்டும் என்று மற்றொரு குழுவினர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.