News

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் உடல் 4 நாட்களின் பின்னர் இன்று மீட்கப்பட்டது #அம்பாறை


பாறுக் ஷிஹான்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் உடல் 4 நாட்களின் பின்னர் இன்று மீட்கப்பட்டது.

கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான பொதுமகன் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் சென்றிருந்தார்.

இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று   அடையாளம் காணப்படவில்லை.பின்னர் கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்பட்டிருந்தது.

அங்கு சடலத்தை காணாமல் சென்றவரின் உறவினர் அடையாளம் காட்டினர்.

குறித்த சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த  நாகலிங்கம் சுரேஸ் (வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார.

குறித்த சடலம் மீதான மேலதிக  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button