News

மரத்திலிருந்து விழுந்து சிறுமி (ரிஷ்வான் பாத்திமா ரிப்கத்) மரணம்

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, ஆயிலிடி கிராம சேவக பிரிவில், மரத்தில் ஏறிய  சிறுமி விழுந்து மரணமான சம்பவம் ஒன்று இன்று(30) பகல் நிகழ்ந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வான்எல புகாரி நகர் வித்யாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்று வருபவராவார்.

இந்தச் சிறுமி, தனது வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் ஏறி, மாங்காய் பறித்து கொண்டு இருந்த போதே, தவறி விழுந்து, பாராங்கல்லில் தலை அடிபட்டு, உயிரிழந்ததாக, உறவினர்களால் பொலிஸில்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

kantalai yoosuf

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button