News
அஸ்வெசும பெறுகின்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும், இன்னும் சில பிரிவு மாணவர்களுக்கும் பாடசாலை அப்பியாச கொப்பிகள், உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு

அஸ்வெசும பெறுகின்ற பெற்றோர்கள் , விசேட தேவையடையவர்கள், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாச கொப்பிகள், உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தை அடுத்த தவணையிலிருந்து அமுல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

