News
விவசாயத்தை சேதப்படுத்தும் விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லை என அமைச்சர் லால்காந்த வெளியிட்ட கருத்துக்கு எதிராக விலங்கின ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தவின் கூற்றுக்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் குறித்து அமைச்சர் கே.டி. பாராளுமன்றத்தில் நேற்று (05) லால்காந்த இதனைத் தெரிவித்தார்.
இதற்கு எதிராக, சுற்றாடல் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் குழுவின் பங்களிப்புடன், பாராளுமன்ற வளாகத்திற்கு செல்லும் பொல்துவ சந்தியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

