முஸ்லிம்களுடன் மிக அந்நியோன்யமாக பழகி இன நல்லிணத்திற்கும் பாடுபட்ட பரதெனியே சந்தரதன தேரரின் மறைவு – பூதவுடலை சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்திய பிரதேச முஸ்லிம்கள்

கனேகந்த ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் பரதெனியே சந்தரதன தேரர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கன்னத்தோட்டையில் இன நல்லிணத்திற்கு மிகவும் பாடுப்பட்ட ஒருவர். சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையையும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபட்டவர் என்றே பிரதேசத்தில் அதிகம் அறியப்பட்ட.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த பெளத்த தேரர் உயிரிழந்த நிலையில் நேற்று இவரின் இறுதி ஊர்வல நிகழ்வில் பிரதேச முஸ்லிம்கள் தமது இறுதி மரியாதையை செலுத்தினர். தங்கள் வியாபாரங்களை மூடிவிட்டு, அவரின் பூதவுடலை சுமந்து சென்ற அதேவேளை சுலைமானியா மைதானத்தில் நடைபெற்ற தகன விழாவில் கலந்து கொண்டனர்.
69 வயதான சந்தரதன தேரர், டிசம்பர் 4 அன்று காலமானார். கருணை மற்றும் பரஸ்பர மரியாதையை விட்டுச் சென்ற ஒருவர் எனவும் சமூகங்களுக்கிடையில் பிணைப்பைக் கட்டியெழுப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் இன்றியமையாதது என பிரதேச மக்கள் தெரிவித்தனர்

