News
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்துச் செய்யப்படும் மசோதா பாாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப் பட்டது.

1986 ஆம் ஆண்டு 4ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்துச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி உரிமைகள் (இரத்து செய்தல்) மசோதாவை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார்.
இந்த மசோதா இயற்றப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்துச் செய்யப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது



