News

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதிவு


கம்பஹா – தம்மிட்ட கௌடங்கஹா பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த (39) ஒருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.



கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் இன்று (8) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மகேவிட பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது



மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோ டியுள்ளார்

துப்பாக்கிசூட்டில் காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.



இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button