News

நாட்டில் உள்ள குரங்குளின் எண்ணிக்கை 30 இலட்சத்தை தாண்டியுள்ளது..

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம் தேங்காய் சந்தையில் மாபியாவல்ல என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பேராசிரியர் திரு.அருண குமார கூறுகிறார்.

நெத் நியூஸ் உடனான விசேட கலந்துரையாடலில், நீண்டகால செயற்பாட்டின் பலனாக தேங்காய் உற்பத்தி பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

அணில் மற்றும் குரங்குகளால் வருடத்திற்கு நூறு மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்கள் அழிவடைவதே தேங்காய் உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நாட்டில் குரங்குளின் எண்ணிக்கை 30 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பேராசிரியர் அருண குமார மேலும் சுட்டிக்காட்டினார்.

Recent Articles

Back to top button