News

சபாநாயகர் அசோக  ரன்வலவின் கலாநிதி பட்டம் நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து  நீக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இணையதளத்தில் சபாநாயகரின் பெயர் டாக்டர் (Dr) என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலா ஆனால் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதிகள் போலியானவை என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அதற்கு பதிலளிக்கும் விதமாக மலிமாவ அரசாங்கத்தை அமைப்பதில் கணிசமான சித்தாந்த பங்களிப்பை வழங்கிய தரப்பினரும் கூட, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதிலளித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி, சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய ஆகியோர் முதன்மையானவர்கள்.மேலும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Back to top button