‘முஸ்லிம்கள் சம்பந்தமான விவகாரங்களுக்கு நான் பொறுப்புதாரி அல்ல. அதற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார்’ ; பிரதியமைச்சர் அமைச்சர் முனீர் முளப்பர் .
‘முஸ்லிம்கள் சம்பந்தமான விவகாரங்களுக்கு நான் பொறுப்புதாரி அல்ல. அதற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார்’ என பிரதியமைச்சர் அமைச்சர் முனீர் முளப்பர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இனவாதத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமே தவிர அதனை முற்றாக ஒழித்துவிட முடியாது நாம் சந்தேகத்தோடு வாழாமல் நம்பிக்கையோடு வாழ பழக வேண்டும்.
எல்லா விடயங்களையும் சந்தேகத்தோடு பார்க்கின்ற போது எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் குறையாக தவறாக விளங்கி தவறான நிலைப்பாட்டிற்கு தள்ளப்படும் நிலைக்கு மாறலாம்.
எந்தவொரு அரசாங்கமும் எடுக்கும் முடிவுகள் நூற்றுக்கு 100 % சரியாக இருக்கும் என்ற உத்தரவாத்தை வழங்க எம்மால் முடியாது.மனிதர்கள் என்ற அடிப்படையில் பதவிகள் வழங்கும் போது தவறுகள் ஏற்படலாம்.எமது அரசாங்கம் வழங்கிய பதவிகளை பற்றி நான் பேசவில்லை.
முஸ்லிம் கெபினட் அமைச்சு கிடைத்ததால் எமாக்கு கிடைத்த நண்மைகள் என்ன என்பதை பற்றி ஆராய வேண்டியது கடமை.
அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் கூட குறுகிய காலத்திற்குள் என்னிடம் வந்த பல முஸ்லிம் சமுக விடங்களுக்கு குறித்த அமைச்சர்களுடன் பேசி என்னால் தீர்வு பெற்றுக்கொடுக்க முடிந்தது என கூறினார்.
மேலும் முஸ்லிம் கலாசார திணைகளத்திற்குள் பிரதி அமைச்சர் முனீர் முள்ளப்பரின் அரசியல் அழுத்தங்கள் இடம்பெறுமா என அவரிடம் கேட்கப்பட்ட போது.
“முஸ்லிம்கள் சம்பந்தமான விவகாரங்களுக்கு நான் பொறுப்புதாரி அல்ல. அதற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார்’ முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது நான் தலையிட வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர் நான் முஸ்லிம் சார்ந்த விடயங்களைப்பற்றி பேசினால் “இது உங்களுக்கு சார்ந்த விடயங்கள் அல்ல , உங்கள் அமைச்சும் அல்ல” என சொல்கிறகள்.சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் புரியவில்லை.இது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
கண்டிப்பாக முஸ்லிம் சார்ந்த விடயங்களில் கட்சி எனது நிலைப்பாட்டினை வினவினால் எனது பூரண உதவியை அவர்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர்களுக்கு தேவையான ஆசனையை வழங்குவதற்கும் தான் தயார் என குறிப்பிட்டார்.