News
குரங்குகள் மீது கைவைப்பது பற்றி நினைத்துப்பார்க்க வேண்டாம் ; அஜந்தா பெரேரா எச்சரிக்கை !!
முன்னாள் அரசு குரங்குகளை சீனாவுக்கு அனுப்புமாறு முன்வைத்த கோரிகையின் உள்ளடக்கத்தை நாட்டிற்கு வெளிப்படுக்குமாறு கோரி சுற்றுப்புற சூழல் ஆர்வாலர் அஜந்தா பெரேரா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்.
மஹிந்த அமரவீர குரங்குகளை சீனாவுக்கு அனுப்பதில் ஏன் இவ்வளவு விருப்பம் காட்டுகிறார்.சீனாவில் ஒரு குரங்குக்கு 50,000 டொலர்கள் கிடைக்கும்.
வரவு செலவு திட்டத்தை கொண்டுவர முடியாத நாட்டில் குரங்களை கொன்றாவது பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர்.
குரங்குகள் மீது கைவைப்பது பற்றி நினைத்துப்பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.