அசோக ரன்வல ஒரு பொய்யர் ; ஆஷு மாரசிங்க

பல்கலைகழகத்தின் பெயரை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத அசோக ரன்வல !
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறும் பல்கலை கழகத்தின் பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டார்.
முன்னாள் சபாநாயகர் நேற்று வெளிட்ட இராஜினாமா கடிதத்தில் “வசீடா” பல்கலைகழகம் என கூறியுள்ளதாகவும் “வசேடா” என்பதே சரியான உச்சரிப்பு என சுட்டிக்காட்டியுள்ள அவர் தான் பட்டம் பெற்ற பல்கலைகழகத்தின் பெயரை கூட உச்சரிக்க தெரியாமல் ஒருவர் இருப்பாரா என கேள்வி எழுப்பினார்.
மேலும் தனது பட்டப்படிப்புக்கான ஆவணங்களை திரட்ட சிறிது காலம் தேவை என அசோக ரன்வல கூறியுள்ளமை பச்சை பொய் என கூறியுள்ள ஆஷு மாரசிங்க வசேடா பல்கலைகழகம் 24 மணிநேரத்தில் சாண்றிதழை வழங்கும் என தான் சவால் விடுவதாக அவர் குறிப்பிட்டார்.
அசோக ரன்வல ஒரு பொய்யர் என அவர் மேலும் குறிப்பிட்டார்

