News

இராணுவத்தை பயன்படுத்தி யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை..- பிரதி அமைச்சர்

காட்டு யானைகளினால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில், அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து யானைகளை விரட்டுவதே தற்சமயம் எடுக்கக்கூடிய விரைவான நடவடிக்கை என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் வனஜீவராசிகள் திணைக்களம் மாத்திரமே இதுவரை தலையிட்டுள்ள போதிலும், இராணுவத்தினர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டுவதற்கான உடனடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த இரண்டு வருடங்களில் யானை – மனித மோதல் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், ஏனைய வன விலங்குகளின் அச்சுறுத்தல் அடுத்த ஆறு மாதங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button