News
VIDEO இணைப்பு > 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும், 2022 இல் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்படாது ; ஜனாதிபதி

எதிர்வரும் 2028ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



