NPP பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அவரது சட்டத்தரணி மனைவி பொலிஸ் முறைப்பாடு !

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கணவர் தனது பிராடோ ரக ஜீப்பை எடுத்துச் சென்று பயன்படுத்துவதாகவும் வாகனம் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற வலுவான சந்தேகம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டத்தரணி மனைவி பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தனது கணவர் தனக்குச் சொந்தமான பிராடோவை எடுத்துப் பயன்படுத்துவதா தான் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணியின் மனைவி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பியான கணவருக்கு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த ஒருவருடன் நீண்டகாலமாக தொடர்பு இருப்பதாகவும், பலமுறை எச்சரித்தும் உறவை நிறுத்தவில்லை என்றும் எம்.பியின் மனைவி போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



