அரசின் தற்போதய கல்வி சீர்த்திருத்தங்களில் டியுஷன் வகுப்புகளை தடை செய்வது அல்லது நெறிப்படுத்துவது தொடர்பில் இல்லை !

தனியார் வகுப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோ அல்லது கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதோ தற்போது அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களில் ஒரு பகுதியாக இல்லை என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன குறிப்பிட்டார்.
ஆனால் ஆரம்ப, இடைநிலை, மாநில மற்றும் அரசு சாரா பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள் நிறைவடையும் போது, டியுஷன் கல்விக்கான தேவைகள் குறைக்கப்படும் அல்லது இல்லாதொழிக்கப்படும் என அரசாங்கம் நம்புவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள் பணமோ, பொருளாதார நிலையோ பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவசக் கல்வியைப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் அறவிடுவதைத் தடைசெய்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு கல்விச் சீர்திருத்த விவாதங்களில் ஒருபோதும் பேசவில்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்த நடைமுறைக்கு புறம்பாக இரண்டு மாகாண சபைகளினால் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



