கிண்ணியா பிரதேச செயலக பிரிவில், இனம் தெரியாதோரால், இரவு நேரங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வீசப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம்.

கந்தளாய் யூசுப்
2025.01.02
இனம் தெரியாதோரால், இரவு நேரங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட கொழும்பு பிரதான வீதி சிவப்பு பாலத்துக்கு அண்மித்த வீதி ஓரங்களில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில், இனம் தெரியாதோரால், இரவு நேரங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இந்தப் பகுதியில் கழிவுகள் அதிகரித்து, துர்நாற்றம் வீசுவதாகவும், பயணிகளின் சுகாதார நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் சுமார் நூறு மீட்டர் தூரம் வரை மூன்று இடங்களில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
போத்தல்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள், பழுதடைந்த உணவுப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள், உணவகங்களில் உள்ள மாமிச கழிவுகள் மற்றும் வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இந்தத் தெரு ஓரங்களில் வீசப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் .
இந்த கழிவுகளை நாடி, முதலைகளும் இந்தப் பகுதியில், நடமாடி வருவதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதியால் பிரயாணம் செய்வது ஆபத்தானதாக மாறி இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, கிண்ணியா பிரதேச சபை இந்த விடயத்தில், உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










