மது அருந்துபவர்களுக்கு பாரிய அசாதாரணம் !

நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொழிற்சாலைகள் மூலம், உற்பத்தி செய்யப்படும் சீனியை முறையாக விநியோகிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் தெரிவித்துள்ளார்.
சீனி உற்பத்தியின் போது பெறப்படும் இதர உற்பத்தியே எதனோல் என கூறிய அவர் கடந்த காலங்களில் தரம் குறைந்த சேளத்தினை பயன்படுத்தி தரம் குறைந்த மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தரம் குறைவான எதனோலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தையை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.இதனால் பாரிய அசாதரனத்திற்க்கு மது அருந்துபவர்கள் உற்பட்டுள்ளார்கள்.
எனவே லங்கா ஷுகர் நிறுவனத்தின் இதர உற்பத்தியாக மக்களுக்கு குறைந்த விலையில் மதுபானத்தை வழங்க எம்மால் முடியும் என அவர் கூறினார்.

