
கோழி இறைச்சி உற்பத்தியை நிறுத்தினால் குரங்கு, மயில் போன்றவற்றின் தொல்லைகள் ஒழிந்துவிடும் என நான் கூறியது நகைச்சுவையான ஒரு விடயம் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி அமைச்சர் திரு.சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
யானை, குரங்கு, மயில் இறைச்சியை உண்பதாக தாம் கூறவில்லை என புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார்.
காமெடிக்காக வெளியிடப்பட்ட கருத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் இருப்பது வேதனைக்குரிய விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மயில்களின் அட்டகாசம் குறையும் வரை கோழி இறைச்சி உற்பத்தியை நிறுத்த முடியாதா என புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைச்சர் வினவினார்.



