News

யூத வழிபாட்டு தலங்கள் சட்டவிரோதம் என்றால்,அரசினால் STF பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன் ?

யூதர்களால் கட்டப்பட்டும் சட்டவிரோத யூத மத ஸ்தலங்களுக்கு அரசினால் STF பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன் ? என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

யூதர்கள் வாழாத இந்த நாட்டில் ஏன் அவர்களின் மதஸ்தலங்கள் எதற்கு ? என கேள்வி எழுப்பிய அவர் இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் சுற்றுலா வருவதால் ஐரோப்பிய நாட்டவர்கள் வருவது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.

யுத்த குற்றங்களில் ஈடுபடும் இஸ்ரேல் இரானுவத்தினர் மன அழுத்தத்தை குறைப்பதற்க்கு இலங்கைக்கு வந்து தங்கி செல்கின்றார்கள் என சுட்டிக்காட்டிய அவர்

மாலைதீவு லத்தீன் அமெரிக்க நாடுகள் , தெற்கு ஆப்பிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டிற்குள் சுற்றுலா வருவதை தடை செய்துள்ளார்கள்.

இஸ்ரேலின் மொஸாட் அமைப்பினர் நாட்டிற்குள் வருவது நாட்டிற்கு நல்லதல்ல . வெலிகம் பிரதேசத்தில் முஸ்லிம்கள்

செரிந்து வாழும் பிரதேசத்திலேயே இஸ்ரேலிய வழிபாடு தலத்தை அமைத்துள்ளனர்.

இது தொடர்பில் பதில் அளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய ..

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் ‘வழிபாட்டு ஆலயங்கள்’ அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. என பதில் அளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் திணைக்களங்கள் அவ்வாறான அனுமதியை வழங்கவில்லை என தெளிவுபடுத்தினார்.

“இந்த வழிபாட்டு மையங்களுக்கு அனுமதி இல்லை. இந்த விவகாரத்தில் விரைவில் தலையிடுவோம். எவ்வாறாயினும், அறுகம்பே சம்பவம் குறித்த உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நாங்கள் தெரிவித்தோம் . இது சுற்றுலாப் பயணிகளுக்கான நமது நாட்டின் பொறுப்பு, சட்டவிரோத மையங்களை அமைப்பதற்கான அனுமதி அல்ல” என்று பிரதமர் விளக்கினார்.

அத்தகையவற்றுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், வெளியுறவு அமைச்சகத்தின் தலையீட்டுடன், இந்த விஷயத்தை நிவர்த்தி செய்யவும், அதன் செயல்பாடுகளை நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் மொத்தம் 25,514 இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவில் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இலங்கையில் சட்டங்கள் இல்லை என்றும் பிரதமர் அமரசூரிய தெளிவுபடுத்தினார்.

“இலங்கையில் எந்தவொரு சட்டமும் மக்கள் சுற்றுலா விசாவில் வந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது உலகம் முழுவதும் பொதுவான நிகழ்வாகிவிட்டது. இதை ஒரு பிரச்சினையாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்,” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“இலங்கையில் குறிப்பாக சுற்றுலா விசாவின் கீழ் இஸ்ரேலியர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் எந்தவொரு விசாவையும் வழங்கவில்லை. எங்கள் சட்டங்களை மீறி அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் அதிகரித்து வரும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரினி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button