News
கருங்கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம் !
எதிர்காலத்தில் கருங்கற்களை ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய பாராளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், நாட்டில் உள்ள கருங்கல், சீமெந்து உற்பத்தி உள்ளிட்ட நாட்டின் தேவைக்கு போதுமானதா என்பது குறித்தும் அங்கு பரிசீலிக்க வேண்டும் என்றார்.