News

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் – 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள்; கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும்;, சீன ஜனாதிபதி நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் கட்டுமானத்திற்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி கலந்துரையாடலின் போது தெரிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்கு 500 மில்லியன் யுவான் (20 பில்லியன் ரூபாய்) நிதியுதவி சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button