லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூதீன் பிரகீத்எக்னலிகொட விவகாரங்களிற்கு நீதி வழங்குவேன்
லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூதீன் பிரகீத்எக்னலிகொட விவகாரங்களிற்கு நீதி வழங்குவேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.
தொலைக்காட்சி பேட்டியொன்றின் போதுஇதனை தெரிவித்துள்ள அவர் கடந்தகால குற்றங்கள் காலவோட்டத்தில் மறக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது குறித்த தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைனகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்,சட்டமா அதிபர் திணைக்களம் நீதித்துறை போன்றநிறுவப்பட்ட கட்டமைப்புகள் உள்ளதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகளிற்கு மிகவும் அவசியமான விசாரணையாளர்கள் பலர் கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றதும் இடமாற்றம் செய்யப்பட்டனர்,650 விசாரணையாளர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்,அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போயை அரசாங்கம் இவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவது தொடர்பிலும் புதியவர்களை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது.
2009 ஜனவரியில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் பற்றி கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி 16 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் சவால்கள் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை எவ்வளவு சவால்கள் இருந்தாலும் விசாரணை கைவிடப்படாது என தெரிவித்துள்ளார்.
வாசிம் தாஜூதீன் படுகொலை போன்ற நன்கறியப்பட்ட படுகொலைகளை விசாரணை செய்வதில் சவால்கள் உள்ளன முக்கிய சாட்சியாள பிரதான சட்டவைத்திய அதிகாரி உயிரிழந்துள்ளார் இதேபோன்று போத்தலஜயந்த தாக்கப்பட்டமை குறித்த முக்கிய ஆவணங்கள் காணாமல்போயுள்ளன,; இந்த தடைகள் இருந்தாலும் நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.