News
மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையாக செயற்பட்டவர் சஜித்துடன் இணைந்து கொண்டார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பாராளுமன்ற விவகாரச் செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே மஹிந்த ராஜபக்ஸவிடம் இருந்து விலகி சஜித் உடன் இணைந்து கொண்டார் .
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவரை மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு நியமித்துள்ளார்.
ஹெட்டிகே பல தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில் மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவர் ஆவார்.