News

தனக்கு கீழ் பணியாற்றும் பெண் காவல்துறை உத்தியோகத்தரை  பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் OIC கைது

தமக்குக் கீழ் பணியாற்றிய பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் மெதிரிகிரிய காவல்நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் வைத்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

சந்தேகநபர் இன்று ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தம்மை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் கோரி குறித்த காவல்நிலைய பொறுப்பதிகாரி ஏலவே தாக்கல் செய்த முன்பிணை கோரிக்கை ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றினால் நிராகரிப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button