News
அமீரகத்தில் இருந்து இலங்கைக்கு கரடிகள் மற்றும் ஹைனாக்கள் அன்பளிப்பு ..

இலங்கையில் உள்ள விலங்கியல் பூங்காக்களில் காட்சிப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து ஒரு ஜோடி பழுப்பு கரடி, ஒரு ஜோடி ஹைனாக்கள் மற்றும் மூன்று ஜோடி மீர்கட்ஸ் ஆகியவற்றை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஹைனாக்கள் ரிதியகம சபாரி பூங்காவில் ஒரு மாதமும், ஏனைய விலங்குகள் தெஹிவளை விலங்கியல் பூங்காவில் ஒரு மாதமும் தனிமைப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு விலங்குகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.


