News

காசா போரில் தலையிட தயாராகும் துருக்கி ; எர்துவான் எச்சரிக்கை

துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போது, தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும் அப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த மோசமான செயல்களை செய்ய முடியாதிருந்திருக்கும். கர்பக்கில் நாம் நுழைந்தது போன்று, லிபியாவில் நாம் நுழைந்தது போன்று அங்கும் நாம் அதனை செய்யக் கூடும்’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஆற்றிய உரையில் எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 2020 இல் ஐ.நா. அங்கீகரித்த அரசுக்கு ஆதரவாக துருக்கி படை லிபியாவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கர்பக்கில் துருக்கி இராணுவ பயிற்சிகளை வழங்கியது தொடர்பிலேயே எர்துவான் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

காசா போரில் எர்துவான் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button